இந்திய அணி வெற்றிபெறும் நொடி வரை தோனி பாடுபடுபவர் - ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய அணி வெற்றிபெறும் நொடி வரை தோனி பாடுபடுபவர் - ஆஷிஷ் நெஹ்ரா

  • Dhoni |
  • Edited by bala |
  • 2020-08-04 11:25:16

வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கேப்டன் தோனி பற்றி சில சிறப்பான தகவலை கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார் என்றே கூறலாம்.

இந்நிலையில் தோனியை பற்றி பல கிரிக்கெட் வீரர்கள் புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் சமீபத்தில் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒன்றுக்கு கூறியது, தோனி இந்திய அணி வெற்றிபெறும் நொடி வரை இந்திய அணியின் வெற்றிக்காக பாடுபடுபவர். அப்படி பல போட்டிகளில் அவர் கடைசி வரை நின்று இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு உலக கோப்பை போட்டி நடைபெற்றது மேலும் அந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டி தான் தோனி கடைசியாக விளையாடிய போட்டி. அந்த போட்டிக்கு பிறகு கேப்டன் தோனிக்கு இந்தியா அணியில் அவருக்கான இடம் கிடைக்காத சூழலில் அது குறித்த விவாதங்கள் அப்போதிலிருந்து பேசப்பட்டு வந்தது.

மேலும் அவர் அவர் கடைசி போட்டியை எனக்கு தெரிந்த வரை இந்தியாவுக்காக மிகவும் மகிழ்ச்சியுடன் ஆடிவிட்டார்,சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அவரது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்காததால் தான் இது குறித்து அனைவரும் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் ஓய்வு குறித்து என்ன நினைக்கிறார் என்று அவருக்கு மட்டுமே தெரியும்.

Latest Posts

#IPL2020: ராஜஸ்தான் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
#IPL2020: கஷ்டமான சூழலில் சென்னை.. ராஜஸ்தான் அணிக்கு 126 ரன்கள் இலக்கு!
பள்ளிகள் திறப்பு : முதல்வர் அறிவிப்பார் ஆனால், சாத்தியக்கூறு இப்பொழுது இல்லை!
மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி
சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.!
கர்நாடகாவில் வெள்ள அபாயம் காரணமாக 35,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றம்.!
முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்
நிலவில் 4-ஜி நெட்வர்க் திட்டம்.. நாசாவுடன் இணையும் நோக்கியா!
#IPL2020: டாஸ் வென்ற சிஎஸ்கே பேட்டிங் தேர்வு ..!
தண்ணீர் குழாய் பழுதுபார்க்கும்போது மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு, 5 பேர் காயம்.!