ஆஷஸ் : 111-வருடத்திற்கு பிறகு ஒரு விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ..!

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள்

By murugan | Published: Aug 26, 2019 05:13 PM

இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நேற்று முடிந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. தனது முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனார்.இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹாஸ்ல்வுட் 4 , கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய அணி112 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி 246 ரன்கள் குவித்தது. இதில் ஸ்டோக்ஸ் 3, ஆர்ச்சர் 2 விக்கெட்டையும் பறித்தனர். இதனை தொடர்ந்து 359 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் 286 ரன்களுக்கு  9 விக்கெட்டை இழந்தது. இதனால் கடைசி ஒரு விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுக்கவேண்டிய நிலைமை இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்டது.இதை தொடர்ந்து களத்தில் நின்ற ஜாக் லீச் , பென் ஸ்டோக்ஸ் இருவரின் நிதானமான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி திகில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இதற்கு முன் 1908-ம் ஆண்டு நடந்த ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பின்னர் 111-வருடத்திற்கு பிறகு நேற்று நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் தான் இங்கிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தால் 135 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.
Step2: Place in ads Display sections

unicc