#BREAKING : டெல்லி முதல்வராக 3வது முறையாக 16-ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16ம் தேதி டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் நேற்று  நடைபெற்றது.இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில்,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 16-ஆம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.