இறுதி சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி இல்லை -அரவிந்த் கெஜ்ரிவால்

இறுதி சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி இல்லை -அரவிந்த் கெஜ்ரிவால்

இறந்த நபரின் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா  கட்டுக்குள் வராததால் நேற்றுடன் முடிய இருந்த ஊரடங்கு மேலும் இரண்டு வாரத்திற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, டெல்லியில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்படும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அதன் படி, அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இன்று முதல் திறக்கப்படும் என்றும், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும். மேலும் போக்குவரத்து சேவை இருக்காது.

அதேபோல  சமூகஇடைவெளி  விதிமுறைகளைப் கடைபிடிப்பதற்காக திருமண விழாக்களில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ள அனுமதியில்லை. இறந்த நபரின் இறுதி சடங்குகளில் 20 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk
Join our channel google news Youtube