அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்து! கண்கலங்கிய கமலஹாசன்!

நடிகர் கமலஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர்

By Fahad | Published: Apr 02 2020 06:27 PM

நடிகர் கமலஹாசன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் 1960-ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகனார். இவர் திரைத்துறையில் காலெடுத்து வைத்து தனது 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசனின் இல்லத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் பிரபு சார்பில், கமலஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு, நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை கமலஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது. பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகம் கண்கலங்க வைத்தது. மனது புன்னகைத்தது. என்று பதிவிட்டுள்ளார்.