வடகிழக்கு சகோதரிகளில் ஒருத்தியான அருணாச்சலின் 34வது பிறந்தநாள் கொண்டாட்டம்… அமித்ஷா பங்கேற்று புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார்….

இந்தியாவின் புதிய மாநிலமாக அருணாசலப் பிரதேசம் உருவாக்கப்பட்டதன் 34-ம் ஆண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சி  அருணாச்சல பிரதேச தலைநகர் ‎இட்டாநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு தொழிற்சாலைகள், சாலை  திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த 34வது ஆண்டு விழாவில் உரையாற்றிய அமித் ஷா, வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் பிரதமர் மோடி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.

Image result for அருணாச்சல பிரதேசத்தில் அமித்ஷா

கடந்த 3 ஆண்டுகளில் வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக 32 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், அதில்,  ஆயிரத்து 200 கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். வட  கிழக்கு மாநிலங்களில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் அனைத்துக்கும் வரும் 2024-ம் ஆண்டுக்குள் தீர்வு காணப்படும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

author avatar
Kaliraj