அருண் ஜெட்லியின்  உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

டெல்லியில் அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின்  உடல் தகனம்  செய்யப்பட்டது.

முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று  உயிரிழந்தார்.

நேற்று  டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.நேற்று முக்கிய தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.இன்று  பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம்  வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதனையடுத்து அருண்ஜெட்லி உடல் ஊர்வலமாக கொன்டுவரப்பட்டது.பின்னர் நிகம்போத் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் அருண் ஜெட்லி  உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.இறுதியாக முழு அரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின்  உடல் தகனம்  செய்யப்பட்டது.