நாளை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லி உடல்

நாளை அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லியின்

By venu | Published: Aug 24, 2019 04:57 PM

நாளை அரசு மரியாதையுடன் டெல்லியில் தகனம் செய்யப்படுகிறது அருண் ஜெட்லியின் உடல். முன்னாள் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி.இவருக்கு வயது 66 ஆகும்.நீண்ட காலமாகவே உடல்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட்  9-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று  உயிரிழந்தார். இந்த நிலையில் அருண் ஜெட்லியின் உடல் இன்று மாலை டெல்லி கைலாஷ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 2 மணி வரை பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.மேலும் நிகம்போத் என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc