ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த 2 பேர் கைது.!

குஜராத் மாநிலத்தில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுளத்து. இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஊரடங்கை மீறி பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் சில இடங்களில் ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா, குட்கா போன்ற புகையிலை பொருட்களை விநியோகம் செய்வதாக தொடர் புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பாக வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு ட்ரோன் மூலம் வீடுகளுக்கு பான்மசாலா சப்ளை செய்த 2 பேரை கைது செய்துள்ளனர். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

ગુજરાતીઓ પાન-મસાલા માટે કંઈપણ કરી શકે તે ફરી એકવાર સાબિત થઈ ગયું….કોરોનાની આ મહામારીના સમયમાં પણ મોરબીમાં ડ્રોનથી મસાલો લેવામાં આવ્યો.. પોલીસને જાણ થતાજ કારવાઈ કરવામાં આવી છે…. આવું જોખમ ના ખેડો???? Courtesy:- Social Media #morbi #lockdown2020 #lockdown #panmasala #gujaratpolice #ahmedabad #rajkot #surat #baroda #gujju #gujjuthings #gujjugram #gujju_vato #gujjustyle #gujjuworld #gujjuwood #gujjuness #gujjuchu #drone #dronephotography #dronestagram #tiktok #tiktokgujju

A post shared by પારકી પંચાત (@parki_panchat) on

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்