மதுரையில் மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு.!

மதுரையில் மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு.!

மதுரையில் கொரோனா சிகிச்சைக்கு மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு.

மதுரையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் நேற்று ஒரே நாளில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக மேலும் 2,000 படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. முதற்கட்டமாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது என மதுரை சிறப்பு அதிகாரி சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு தீவிரமடைவதை அடுத்து, அங்கு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதில் மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube