370வது சட்ட பிரிவு நீக்கம் ஒரு வரலாற்று சிறப்பு.. இதனால், அந்த நாட்டின் பினாமி போர் முடிவுக்கு வந்துள்ளது.. இந்திய இராணுவ தளபதி அதிரடி கருத்து…

370வது சட்ட பிரிவு நீக்கம் ஒரு வரலாற்று சிறப்பு.. இதனால், அந்த நாட்டின் பினாமி போர் முடிவுக்கு வந்துள்ளது.. இந்திய இராணுவ தளபதி அதிரடி கருத்து…

  • இன்று இந்திய ராணுவ தினத்தையொட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
  • பின்னர் அவர்  அனைவரையும் விழிப்படைய செய்யும் விதமாக .ஆற்றிய  இராணுவ தின உரை.
     அதில் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரில்  370 வது  சட்ட பிரிவை ரத்து செய்வதற்கானமத்திய அரசின்  முடிவு, ஒரு ‘வரலாற்று  சிறப்புமிக்க நடவடிக்கை’ இது நமது ‘மேற்கு அண்டை நாடுகளின்’ பினாமி போரை சீர்குலைத்து அவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு பல வழிகள் உள்ளன, அந்த வளங்களை  பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம்.  இந்திய இராணுவம் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, உலகளாவிய முன்னேற்றங்களையும் தொடர்ந்து  கண்காணித்து வருகிறது.இந்திய இராணுவம்,  ‘தொழில்நுட்ப நீதியாகவும் ‘ மற்றும் ‘சுதேசிமயம்’ தொடர்பாகவும்  இந்திய ராணுவம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Related image
இது  எங்கள் அடிப்படை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தவும், இந்திய இராணுவத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படவும்  எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். என்று  கூறினார். இதற்க்கு முன்னதாக  இந்தியா கேட்டில் பகுதியில் உள்ள  ‘அமர்ஜவான்’ ஜோதி போர் நினைவுச் சின்னத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படைத் தளபதி கராம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்திய இராணுவ தளபதியின் இந்த பேச்சு இந்திய மக்க்ளிடையும், இராணுவ வீரர்களிடையேயும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர்.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube