நரைமுடி பிரச்சனையால் கஷ்டப்படுகிறீர்களா? அப்ப கண்டிப்பா இதை படிங்க!

இன்றைய உலகில் நம்முடைய உணவு மற்றும் பாரம்பரிய முறைகள் அனைத்துமே மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஏன்னென்றால், தலைமுடியை பொறுத்தவரையில், இன்று மிக சிறியவர்களுக்கு கூட நரை முடி வளருகிறது.

இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், நாம் தான் அதற்கு காரணமாக இருக்கிறோம். அக்காலத்தில் இயற்கையான மூலிகை பொருட்களை தான் நமது தலைக்கு பயன்படுத்தினோம். ஆனால் இன்று பல வகையான, பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய கெமிக்கல் கலந்து ஷாம்புக்களை தான் நாம் பயன்படுத்துகிறோம்.

தற்போது இந்த பதிவில் நரைமுடி பிரச்னை உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

செய்முறை : 1

தேவையானவை

  • நெல்லிக்காய் பொடி – 2 டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்

செய்முறை

ஒரு சிறிய பாத்திரத்தில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, அதனுள் எலுமிச்சை சாற்றை விட்டு, நன்றாக பேஸ்ட் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நமது தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நன்கு மசாஜ் செய்த பின், நீரால் தலை முடியை அலச வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வந்தால், நரைமுடி பிரச்சனையில் இருந்து வெகு சீக்கிரத்தில் விடுதலை பெறலாம்.

செய்முறை : 2

தேவையானவை

  • செம்பருத்தி பூ – 2 அல்லது 3
  • அவுரி விதை – சிறிதளவு
  • நெல்லிக்காய் (காய வைத்தது) – சிறிதளவு

செய்முறை

செம்பருத்தி பூ, அவுரி விதை, காய வைத்த நெல்லிக்காய் மூன்றையும் சம அளவு எடுத்துக் கொண்டு, அதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அகலவையில் சிறிதளவு தண்ணீரில் கலந்து வெள்ளை முடி உள்ள இடங்களில் தடவ வேண்டும்.

அரை மணி நேரம் நன்கு ஊற வைத்த பின்பு, நீரால் முடியை அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், முடி கறுப்பாகுவதுடன், வெள்ளை முடி அதிகமாகாமல் தடுக்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment