ஆலம் பழத்தில் இருக்கும் அற்புதமான மருத்துவ குணங்கள் என்னென்ன என்பதை பற்றி நீங்கள் அறிவீரா ?

ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.இது நமது உடலில்

By Priya | Published: Jul 21, 2019 11:24 AM

ஆலமரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.இது நமது உடலில் இருக்கும் பல வகையான நோய்களை குணப்படுத்த நல்லது. ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணம் நிறைந்தது. ஆலம் பழத்தின் அற்புதமான மருத்துவனை குணங்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

ஆலம் பழம் :

  ஆலம் பழம் நமது உடலில் உள்ள பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்லது. ஆலம்பழத்தை நிழலில் காய வைத்து அதனை பொடி செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் அது உடலில் உள்ள பல் நோய்களை குணப்படுத்தும்.

பல்வலி :

  பல்வலி ஏற்படும் சமயத்தில் ஆலம் மொட்டினை வாயில் வைத்து அடக்கி வந்தால் பல்வலி குணமாவதோடு பல் பிரச்சனைகளையும் தீர்க்கும். ஆலம் குச்சியில் தினமும் துலக்கி வர பற்கள் வலிமையாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சருமம் ஜொலிக்கும் :

ஆலம் பழத்தை பொடி செய்து முகத்திற்கு பூசி வர முகம் பளபளப்பாகும். மேலும் ஆலம் பழம் குளியல் சோப்புகள் தயாரிப்பதிலும் பயன்படுகிறது.

மூல நோய்  :

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் நீங்கும்.

மலட்டு தன்மை :

ஆலம் பழத்தை நிழலில் காய வைத்து பொடி செய்து  எடுத்து வைத்து கொள்ளவும். இந்த பொடியினை 48 நாட்கள் பசும்பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து  குடித்து வந்தால் ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டு தன்மை பிரச்சனை நீங்கும்.

மாதவிடாய் பிரச்சனை :

ஆலம் பழம் மாதவிடாய் பிரச்சனைகளையும் இது குணபடுத்துகிறது.    
Step2: Place in ads Display sections

unicc