தித்திக்கும் சுவையில் அவல் கேசரி எப்படி செய்வது என்பதை பற்றி அறிவீரா ?

அவல் நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை தரவல்லது.இது நமது உடலிற்கு பலவகையான சத்துக்களை கொடுக்க வல்லது. அவலை நாம் தினமும் காலை உணவாக எடுத்து கொண்டால் அது நமது உடலுக்கு சுறுசுறுப்பை அளிக்கும். அன்றைய நாள் முழுவதும் நம்மை சோர்வாகாமல் வைத்து கொளல் உதவியாக இருக்கும்.

பண்டிகை நாட்களில் மட்டும் தான் நாம் அவலை பயன்படுத்தி பார்த்திருப்போம். அவலை பயன்படுத்தி கேசரி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

தேவையான பொருட்கள் :

அவல் -2 கப்

சர்க்கரை -1 கப்

கேசரி பவுடர் – 2 சிட்டிகை

நெய் -1/2 கப்

ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி

முந்திரி -தேவைக்கேற்ப

செய்முறை :

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் அவல் மற்றும் முந்திரியை நெய் சேர்த்து  பொன்னிறமாக வறுக்கவும். பின்பு முக்கால் டம்ளர் தண்ணீரில்  சேர்த்து கேசரி பவுடரை கரைத்து அதில் அவலை சேர்ந்து வேக விட வேன்டும்.

அவள் வெந்து கெட்டியானவுடன் சர்க்கரை மற்றும் நெய்யை சேர்த்து கிளறவேண்டும். கேசரி பதம் வந்தவுடன் வறுத்த முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.