பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்

பாதாம் பிசினில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? வாருங்கள் பார்ப்போம்

பாதாம் பிசினில் உள்ள நன்மைகள்.

நமது நாட்டின் வடக்கு பகுதியில் வளரும் மரங்களில் ஒன்று, பாதாம் பருப்பு மரம். இந்த மரத்தை வாதுமை மரம் என்றும் அழைப்பதுண்டு. இந்த மரத்தில் இருந்து கிடைக்கக் கூடிய பாதாம் பருப்பு நமது உடல் னத்திற்கு எவ்வளவு நன்மைகளை அளிக்கிறதோ, அது போல இந்த மரத்தின் பிசினில் பல நன்மைகள் உள்ளது.

தற்போது இந்த பதிவில் பாதாம் பிசினில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

உடல் சூடு

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு உடல் சூடு பிரச்னை ஏற்படுவதுண்டு. இந்த பிராசனை உள்ளவர்கள், பாதாம் பிசினை தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, அது கோந்து போன்று ஆன பிறகு சாப்பிட்டால், உடல் சூடு தணிந்து விடும்.

உடல் எடை

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், பாலில் பாதாம் பிசினை கலந்து ஒரு நாளைக்கு ஒருமுறை அருந்த வேண்டும். மாறாக, உடல் எடை அதிகரிக்க வேண்டும் என விரும்புபவர்கள், கொழுப்பு நிறைந்த பாலில் பாதாம் பிசினை கலந்து சாப்பிட வேண்டும்.

புண்கள்

வெட்டு காயங்கள் மற்றும் தீயினால் ஏற்பட்ட புண்களை உடையவர்கள், தண்ணீரில் ஊற வைத்த பாதாம் பிசினை, சிறிது உள்ளங்கையில் எடுத்து, நன்றாக குழைத்து புண்கள், காயங்களின் மீது தடவி வந்தால் அவை சீக்கிரத்தில் ஆறி விடும்.

]]>