நாவல் பழத்தின் விதையிலும் இவ்வளவு நன்மைகளா? வாருங்கள் அறிவோம்!

பொதுவாக பழங்கள் என்றாலே இயற்கை நமக்கு கொடுத்துள்ள வரம் என்று தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பழத்திலும் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. குறிப்பாக நாவல் பழத்தில் எக்கச்சக்கமான மருத்துவ நன்மைகளும், சத்துகளும் அடங்கியுள்ளது. அந்த பழத்தை மட்டும் அல்லாமல் அதன் விதையில் ஏகப்பட்ட மருத்துவ நன்மைகள் உள்ளது, அவை என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

நாவல் பழ விதையின் நன்மைகள்

நாவல் பழத்தின் விதையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது உடலில் காணப்படக்கூடிய பிரச்சினைகள் பலவற்றை சரிசெய்யும் சக்தி கொண்டது. 100 கிராம் நாவல் பழத்தில் 15 மில்லி கிராம் கால்சியமும், 141 மில்லி கிராம் இரும்புச் சத்தும், 35 மில்லி கிராம் மெக்னீசியமும், 15 மில்லிகிராம் பாஸ்பரசும், வைட்டமின், நீர்ச்சத்து, சோடியம் என பல அடங்கியுள்ளது. அதேபோல அந்த பழத்துக்கு ஈடான பலமடங்கு சக்திகளை அதன் விதையும் கொண்டுள்ளது.
அதாவது நாவல் பல விதையை நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பயன்படுத்தலாம். பழத்தை சாப்பிட்டுவிட்டு விதையை நன்றாக காயவைத்து அரைத்து எடுத்து குடிக்கும் பொழுது இதயம் ஆரோக்கியம் அடைகிறது. இதன் மூலம் ஜீரணக் கோளாறுகள் வயிற்றுப் புண் வயிற்று எரிச்சல் ஆகியவையும் குணமடைகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடிய அதிகப்படியான சத்து இந்த நாவல் பழ விதையின் உள்ளது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இது பெரும் பங்கு வகிக்கிறது என்று மருத்துவர்களே கூறுகின்றனர்.
author avatar
Rebekal