மாதுளைப்பழத்திலும் இவ்வளவு மருத்துவக்குணங்களா? வாருங்கள் அறிவோம்!

பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம்

By Fahad | Published: Apr 05 2020 09:12 AM

பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம் பழம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதன் நிறம் மட்டுமல்லாமல் சுவையும் சாப்பிடுவதையும் பார்க்கச் செய்கிறது. இந்த மாதுளம் பழம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களும் மிக அதிகம். என்னவென்று பார்ப்போம் வாருங்கள்,

மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்:

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அகற்றுகிறது. இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.  உடலில் உள்ள பித்தத்தை போக்கும். மாதுளம் பழத்தில் இரு வகைகள் உள்ளது. அதில் இனிப்பு மாதுளம் பழம் மூளைக்கு மிகுந்த சக்தியை கொடுக்கும், புளிப்பு மாதுளம் பழம் வயிற்று கடுப்பை நீக்கும், ரத்தப்போக்கு மற்றும் தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. தொடர் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டால் உடல் பலவீனம் நீங்கி, உடல் எடை கூடி நல்ல சத்தும் ரத்த ஓட்டமும் கிடைக்கிறது. குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. விக்கலை உடனே நிறுத்துவது கூட இந்த மாதுளம் பழம் மிகவும் துணைபுரிகிறது. காய்ச்சலைத் தணிக்கும் சக்தி கொண்டது. மாதுளம் பழத்தில் தேனை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெற்று தெம்பு உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாக இது வழி செய்கிறது. மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி நீங்கி, உடல் சூடு குறைகிறது.