சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை கைப்பற்றிய அரவிந்த்சாமி!

சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம

By manikandan | Published: Sep 10, 2019 08:15 AM

சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. வரலாற்று பின்னணி கொண்ட பிரம்மாண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான ராம்சரன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஒவ்வொரு மொழியிலும் சிரஞ்சீவிக்கு அந்தந்த மொழி முக்கிய நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் சிரஞ்சீவிக்கு முதலில் தமிழ் குரல்கொடுக்க இருந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால் அவர் தர்பார் சூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருந்தால், இப்படத்திற்கு குரல் கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அதனால் தற்போது நடிகர் அரவிந்த்சாமி சிரஞ்சீவிக்கு குரல் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடைசியாக அரவிந்த் சாமி, லயன் கிங் படத்தில் குரல் கொடுத்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
Step2: Place in ads Display sections

unicc