கமல்ஹாசன் கட்சி பிரச்சார கூட்டத்தில் முட்டை மற்றும் கல்வீச்சு! அரவக்குறிச்சியில் பரபரப்பு!

கமல்ஹாசன் பங்கேற்ற அரவக்குறிச்சி பிரச்சார கூட்டத்தில் கமல் வாகனம் மீது முட்டை

By manikandan | Published: May 16, 2019 10:26 PM

கமல்ஹாசன் பங்கேற்ற அரவக்குறிச்சி பிரச்சார கூட்டத்தில் கமல் வாகனம் மீது முட்டை மற்றும் கல்வீச்சு நடைபெற்றுள்ளது . இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. கமலஹாசன் சில நாட்களுக்கு முன்னதாக இதே அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, ' இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனவும் அவர் பெயர் நாதுராம் கோட்ஸே எனவும் குறிப்பிட்டார். இது நாடு முழுவது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதனால் பல இடங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மீண்டும் அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் பகுதியில் பிரச்சாரம் முடிக்கும் போது, அவரது வாகனத்தின் மீது இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் முட்டை, கல், செருப்பு போன்றவற்றை வீசி அவர் வாகனம் மீது தாக்குதலை நடத்தினர். இதனால் அப்பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சிகாரர்களுக்கும், இந்து முன்னணியை சேர்ந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு உள்ளது. இதனை போலீசார் கட்டுப்படுத்தி வருகின்றனர், கமல் கட்சியினர் கல்வீசியவர்களை கைது செய்ய வற்புறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc