அரசகுமார் எந்த கூட்டத்திலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது-தமிழக பாஜக..!

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர்

By murugan | Published: Dec 02, 2019 05:20 PM

புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் பி.டி அரசகுமார் கலந்து கொண்டார்.திருமண நிகழ்ச்சியில் பேசிய அரசகுமா , அவர் எம்ஜிஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு க ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போது முதலமைச்சராக ஆகி இருக்கலாம் ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார். காலம் வரும் கண்டிப்பாக மு. க ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என பேசினார். இவரது பேச்சு பாஜகவினர் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்னை விமானத்தில் பேசிய பி.டி அரசகுமார் தனது தனிப்பட்ட உணர்வுகளை தான் வெளிப்படுத்தினேன். அதற்கு கட்சித் தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்று கொள்ள தயார் என கூறினார். மு க ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பி.டி அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கட்சி தலைமைக்கு தமிழக பாஜக கடிதம் அனுப்பி உள்ளது. தலைமையிலிருந்து பதில் வரும் வரை கட்சி சார்பில் எந்த கூட்டத்திலும் , நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூடாது என தமிழக பாஜக கூறியுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc