15 வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஆக்சன் ரஜினியை தர்பாரில் பார்க்கலாம்! - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  ஏ.ஆர்.முருகதாஸ்

By manikandan | Published: Dec 08, 2019 04:20 PM

  • ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். 
  • ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
  • நேற்று நடைபெற்ற இப்பட இசை வெளியீட்டு விழாவில் முருகதாஸ் ரஜினிகாந்த் குறித்து பாராட்டி பேசினார்.
சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் என பலர் கலந்துகொண்டனர். அப்போது படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ' படத்தில் வேலை பார்த்த தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி பெருமையாக குறிப்பிட்டார். அதிலும் குறிப்பாக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மிகவும் சிறப்பாக திரைப்படம் வரவேண்டும் என தேவையான காட்சிகளை கேட்டு வாங்கி படத்தொகுப்பை மேற்கொண்டார். எனவும், படத்தின் கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் நான் என்ன நினைத்தேனோ அதனை செட் போட்டு கொடுத்தார். எனவும் குறிப்பிட்டார். சண்டை காட்சி இயக்குனர்கள் அன்பறிவு மாஸ்டர்கள் சிறப்பாக சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளனர். அதிலும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்துள்ளார். டூப் ஏதுமில்லாமல் நன்றாக நடித்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்னதாக ரஜினி எப்படி இருந்தாரோ அப்படியேதான் இந்த படத்திலும் மிகச் சிறப்பாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளார். என பெருமையாக பேசினார். அவரை தியேட்டரில் காண தேடி ஓடி அலைந்த காலம் மாறி தற்போது அவரை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன். இதனை என்னால் நம்பவே முடியவில்லை. என நெகிழ்ச்சியாக தனது உரையை பேசி முடித்தார்
Step2: Place in ads Display sections

unicc