வரலாற்றில் இன்று(01.04.2020).... உலக முட்டாள்கள் தினம் இன்று....

கடந்த 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான 

By kaliraj | Published: Apr 01, 2020 06:43 AM

கடந்த 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பா கண்டத்தில் உள்ள பெரும்பான்மையான  நாடுகளில் ஏப்ரல் மாதம்  1ஆம் தேதியை  ஆண்டின் தொடக்க நாளாக கருதி புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. தற்போது ஜனவரி மாதம் 1ஆம் தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அத்தனையும், அந்த நாடுகளில் ஏப்ரல் 1-ஆம் தேதியில் கடைபிடிக்கப்பட்டன. காரணம், அப்போதைய ஜூலியன் நாள்காட்டியில்  ஏப்ரல் 1-ந்தேதி தான் ஆண்டின் தொடக்கமாக புத்தாண்டு தினமாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

பின்  13-ம் கிரகரி என்ற போப் ஆண்டவர் ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டு கிரகோரியன் ஆண்டு கணிப்பு முறையை கொண்டுவந்தார். அதை பல நாட்டினரும் ஏற்க மறுத்தனர். ஆனால், ஜனவரி 1ஆம் தேதியை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டவர்கள், அதை ஏற்க மறுத்தவர்களை முட்டாள்களாக கருதிய அவர்கள்  ஒவ்வொரு ஏப்ரல் 1-ந்தேதியும் அவர்களுக்கு வெற்று பரிசுப்பெட்டியை அனுப்பி வைத்து அவர்களை ஏமாற்றினர். ஒரு கட்டத்தில் உலகம் முழுவதும் ஜனவரி 1-ந்தேதியை புத்தாண்டாக பின்பற்ற தொடங்கிய பிறகும் கூட முட்டாள்கள் தினம் மறையவில்லை. மாறாக, ஒருவரையொருவர் ஏமாற்றும் தினமாக அது உருவெடுத்துவிட்டது. அந்த வகையில் வரலாற்றில் இன்று உலக முட்டாள்கள் தினம் இன்று..

Step2: Place in ads Display sections

unicc