ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் செயல்திறன் குறைவு எதிரொலி!தீவிர விசாரணையில் அமெ.

அமெரிக்க அரசு ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன் மாடல்களின் செயல்திறன் குறைக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து  விசாரணை நடத்தி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் பழைய மாடல் ஐபோன்கள் உள்ளிட்ட சாதனங்களின் செயல்திறன் குறைந்து போனதாக புகார்கள் எழுந்தன.
ஆப்பிள் நிறுவனத்தில் புதிய மாடல்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், பழைய மாடல் ஐபோன்களின் செயல்திறன் குறைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவின் நீதி மற்றும் பாதுகாப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment