கொரோனா விழிப்புணர்வு குறித்த செயலியை வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம்!

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் ஒரே பெயர், கொரோனா. இந்த வைரஸின் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 6 லச்சத்தி 68ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் இறந்துள்ளனர்.

இந்த வைரஸின் தாக்கத்தை குறைக்க உலக நாடுகள் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மக்கள் அனைவரும் சமூக விலகலை பின்பற்றுமாறு அனைத்து நாடுகளின் பிரதமர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் ஒரு செயலி மற்றும் ஒரு வலைத்தளத்தையும் உருவாகியுள்ளது.

அதில் கொரோனா வைரஸ் பற்றி தெரிந்து கொள்ளவும், அதன் விழிப்புணர்வு மற்றும் அதன் சிகிச்சை முறை குறித்து வெள்ளை மாளிகை கொரோனா வைரஸ் பணிக்குழு மற்றும் அமெரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்துடன் இணைந்து இந்த செயலியை உருவாகியுள்ளது. இந்த செயலி, ஐ-போன் பயனாளர்கள் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும், மற்ற பயனாளர்களுக்கு ஒரு வலைத்தளத்தை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.