சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி..!

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றதில்  தலைமை நீதிபதியாக இருந்தால் தஹில் ரமணி

By murugan | Published: Oct 17, 2019 04:29 PM

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றதில்  தலைமை நீதிபதியாக இருந்தால் தஹில் ரமணி மேகாலயாவில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத தஹில் ரமணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த விவகாரம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. அவர் பதவியை ராஜினாமா செய்ததால் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமைப் பொறுப்பு நீதிபதியாக வினித் கோத்தாரி உள்ளார். இதைத்தொடர்ந்து பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் 31-ம் தேதியுடன் இவர் பதவிக்காலம்  முடிவடைகிறது என்பது குறிப்பிடதக்கது.
Step2: Place in ads Display sections

unicc