கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து அசத்திய மருத்துவர்கள்.!

  • சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து நாட்டில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
  • இந்த நிலையில்  கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சீனாவில் உள்ள பல நகரங்களில் பரவியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இந்த வைரசால் சீனாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 361-ஆக உயர்ந்துள்ளது. பின்னர் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த புதிய வகை வைரசுக்கு தடுப்பு மருந்து ஏதும் இல்லை. அதனால் இந்த வைரசுக்கு உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சீனாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து நாட்டில் தான் கொரோனா வைரஸ் பாதிப்பால் 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில்  கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்த அரசு அறிவித்துள்ளது. இது பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில், மருத்துவர் கிரிங்கஸ்க் தலைமையிலான குழு இந்த மருந்தை கண்டுபிடித்துள்ளது. இதில் காய்ச்சல் தடுப்பு மருந்தையும், எச்.ஐ.வி. கிருமி தடுப்பு மருந்தையும் சேர்த்து 71 வயது சீனப் பெண் நோயாளிக்கு மருத்துவர்கள் கொடுத்தனர். தாய்லாந்துக்கு வந்திருந்த அந்த பெண் 3 நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பாதிப்புடன் பாங்காங்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், புதிய மருந்தை அந்த பெண்ணுக்கு கொடுத்த 48 மணி நேரத்துக்குள் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் நேற்று அந்த பெண் தனது படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தார். அது மட்டுமின்றி காய்ச்சலும் விலகியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதன் மூலம் காய்ச்சல் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு மருந்துகளின் கலந்து கொடுத்தது உலக மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கிடையே தாய்லாந்து மருத்துவர்கள் குழு காய்ச்சல் மருந்தையும், எய்ட்ஸ் மருந்தையும் சேர்ந்து கலந்து தயாரித்துள்ள புதிய வகை மருந்தை அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் ஆய்வுக் கூடங்களில் சோதித்திப் பார்த்து வருகின்றன. அந்த சோதனைகளில் வெற்றி கிடைத்தால் கொரோனா வைரஸ் பரவு வதை வெற்றிகரமாக தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்