பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு தாக்குதல்,அதே வெற்றி ! இந்திய அணியை பாராட்டிய அமித் ஷா

இந்திய அணி வெற்றிபெற்றதற்கு அமித் ஷா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக

By Fahad | Published: Apr 08 2020 08:58 AM

இந்திய அணி வெற்றிபெற்றதற்கு அமித் ஷா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக கோப்பையில்  நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி , பாகிஸ்தான் அணி மோதியது.இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் குவித்தது. மழை காரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டு 302 இலக்காக வைத்தனர்.பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 212 ரன்கள் மட்டுமே எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைத்தது.மேலும் 50 ஓவர் உலக  கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததில்லை என்ற சாதனையை மீண்டும் தக்கவைத்து கொண்டது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை போட்டியில் வீழ்த்திய இந்திய அணிக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவரது பதிவில்,இதன் மூலம் பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல் நிகழ்தப்பட்டு இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.இது அனைவரும்  பெருமைபடக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.