கொரோனாவை தொடர்ந்து சீனாவை உலுக்கிய மற்றோரு அதிர்ச்சி சம்பவம்!

சீனாவில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலநடுக்கம். கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு. 

இன்று உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொரோனா வைரஸ், முதன்முதலாக சீனாவின் வுஹான் மாகாணத்தில் தான் முதலில் ஆரம்பமானது. இந்த வைரஸானது, அந்நாட்டு மக்களில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது. மேலும் பலர் உயிரிழந்தும் உள்ளனர். 

இந்நிலையில், தற்போது தான் இந்த வைரசின் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு, அந்நாட்டு மக்கள் மெது மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனையடுத்து, அந்த நாட்டை அடுத்ததாக அச்சுறுத்தும் விதத்தில், யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு  பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. சீன புவியியல் ஆய்வு மையம், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்ததுள்ளது.

யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கிய நிலையில், ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.