சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்கு

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின்

By Dinasuvadu desk | Published: Sep 17, 2019 03:34 PM

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை அருகே  அதிமுக பிரமுகர் மகளின் திருமணத்திற்க்காக வைத்திருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதிமன்றமும் கண்டனத்தை பதிவு செய்து அரசியல் கட்சிகளை பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்தியது. சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான ஜெயகோபால் மீது ஏற்கனவே, 304(A), 279, 336 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவான  308-ன் கீழ் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரது உறவினர் மேகநாதன் பெயர் FIR ல் சேர்க்கப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc