ராஜீவ்காந்தி கொலைவழக்கு : பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு

  • ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதலில் ஒரு

By Fahad | Published: Apr 06 2020 08:41 PM

  • ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதலில் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. 
  • பேரறிவாளனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன்,  உள்ளிட்ட 7 பேர் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.சிறைவாசம் அனுபவித்துவரும்  பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.அவரது தந்தையின் உடல்நலம்,அக்கா மகள் திருமணம் உள்ளிட்ட காரணங்களால் பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது.2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 30 நாட்கள் பரோல் வாங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலும்  பரோல் வழங்கப்பட்டது. அக்கா மகள் திருமணம்  நடைபெற்று முடிந்த நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பரோல் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.