கொடூரன்.! உறவினர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நான்கு வயது குழந்தை.!

தெலங்கானாவின் ஜெயசங்கர் பூபால்பல்லி மாவட்டத்தில் தனது தாய் மற்றும்

By balakaliyamoorthy | Published: Jan 04, 2020 08:50 AM

  • தெலங்கானாவின் ஜெயசங்கர் பூபால்பல்லி மாவட்டத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் 4 வயதான குழந்தை ஷாம்லி.
  • அந்த குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அவரது உறவினரை போலீசார் தேடி வருகின்றனர்.
தெலங்கானாவின் ஜெயசங்கர் பூபால்பல்லி மாவட்டத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் வசித்து வரும் 4 வயதான குழந்தை. கடந்த மூன்று தினங்களுக்கு முன் அந்த குழந்தை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது உறவினர் 36 வயதான ராசா கொமுரையா என்ற ஒருவர் தூக்கிச்சென்று, அக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதனை தொடர்ந்து அடுத்த நாள் எழுந்து பார்த்த போது அங்கு குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்த தாய், காவல்நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார். அதையடுத்து தாயுடன் சென்று அருகிலுள்ள இடமெல்லாம் தேடிய போலீசார் எங்கும் கிடைக்கவில்லை. பிறகு அங்குள்ள பருத்தித் தோட்டத்தில் இருந்து குழந்தையை மீட்டுள்ளனர். இதனிடையே தனக்கு ஏற்பட்டதை தன் தாயிடம் அழுதுக் கொண்டே கூறிய குழந்தையை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சியை அளித்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த அவரது உறவினரை ராசா கொமுரையா போலீசார் தேடி வருகின்றனர்.
Step2: Place in ads Display sections

unicc