பள்ளிவாசலில் உடற்கூராய்வு : இஸ்ஸாமியர்கள் பேருந்து நிலையத்தில் தொழுகை !

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் கேரளாவில் பல இடங்களில்

By murugan | Published: Aug 17, 2019 11:58 AM

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளதால் கேரளாவில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்து உள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலப்பரா பொத்துக்கல்லுவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 60 பேர் இறந்து உள்ளனர்.அவர்களின் உடலை மீட்கும் பணிநடந்து வந்தது.மீட்ட உடலை நீலாம்பூர் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர்.ஆனால் அங்கு இருந்து 40 கிலோ மீட்டர் என்பதல் ஏற்கனவே உடல்கள் பாதிக்கப்பட்டு உள்ளது. Image result for postmortem Mosque நீலாம்பூர் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்று உடற்கூராய்வு செய்வது கடினம். அதனால் இங்கு ஒரு ஹால் கிடைத்தால் உடற்கூராய்வு செய்து விடலாம் என மருத்துவர்கள் கூறினார். இதை அறிந்த மஜித் அல் முஜாஹிதின் கமிட்டி என்ற இஸ்ஸாமிய அமைப்பு மசூதியில் உடற்கூராய்வு செய்ய அனுமதி கொடுத்தனர் .மசூதியில் உடற்கூராய்வு மருத்துவர்கள் ஈடுபட்டதால் ,நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் இஸ்ஸாமியர்கள் வழக்கம் போல நடத்தப்படும் தொழுகையை அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் ஈடுபட்டனர்.இந்த தொழுகையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
Step2: Place in ads Display sections

unicc