சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளர்! ரூ.5,000 அபராதம் விதிப்பு!

சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு. மத்திய

By leena | Published: May 12, 2020 12:28 PM

சினிமா பாணியில் வீடியோ வெளியிட்ட காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம் விதிப்பு.

மத்திய பிரதேச மாநிலத்தில் மனோஜ் யாதவ் என்பவர், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கனின் படங்களை ரசித்து பார்ப்பதுண்டு. இவரது படங்களை தொடர்ந்து பார்த்து வந்த இவர், அவர் செய்வது போன்று செய்ய முயற்சி செய்துள்ளார்.

இவர் இரண்டு ஹோண்டா கார்களை ஓடவிட்டு,  போலீஸ் உடையணிந்து காரில் ஏறி  கொண்டு,  காரின் மீது ஒரு காலை வைத்துக் கொண்டு, மற்றோரு காலை மற்றோரு காரின் மீது வைத்துக் கொண்டு, இதன் பின்னணியில் சிங்கம் பாடலை ஓட விட்டு, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், இவர் வெளியிட்டுள்ள வீடியோ, சாகர் காவல் ஆய்வாளர் அனில் ஷர்மா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மனோஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். 

இவரது உத்தரவின்  பேரில், மனோஜின் தலைமை பொறுப்பு திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், இவர் சாலை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

 

Step2: Place in ads Display sections

unicc