பார்வையற்ற திருமூர்த்தியை படத்தில் பாட வைத்த டி இமான் ! எந்த படம் அது ?

நடிகர் ஜீவா நடிப்பில் ரத்தினா சிவா இயக்கத்தில் வெல்ஸ் பிலிம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் "சீறு". இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.  இதில் நவ்தீப், ரியா சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை இசையமைக்கும் டி இமான் அவர்கள் சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை கண்டு நான் அவரை படத்தில் பாட வைக்கபோவதாக அறிவித்திருந்தார். இதுக்குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என்றார். இந்நிலையில், டி இமான் திருமூர்த்தியை ஜீவாவின் 'சீறு' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் செய்வதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெறிவித்துள்ளார். https://www.instagram.com/p/B38bvf4h_ay/?igshid=14177umqiizzw https://www.instagram.com/p/B38bvf4h_ay/?igshid=14177umqiizzw