ஓரங்கட்டப்பட்ட புகழேந்தி! அமமுக செய்தி தொடர்பாளர்களின் புதிய பட்டியல் வெளியீடு!

சில நாட்களுக்கு முன்னர், அமமுக கட்சி பிரமுகர் புகழேந்தி சம்மந்தப்பட்ட வீடியோ

By manikandan | Published: Sep 16, 2019 01:43 PM

சில நாட்களுக்கு முன்னர், அமமுக கட்சி பிரமுகர் புகழேந்தி சம்மந்தப்பட்ட வீடியோ ஒன்று  அமமுக இணையதள பக்கங்களில் வெளியாகி வைரல் ஆனது. அந்த வீடியோவில் புகழேந்தி அவர்கள் பேசும்போது,  டிடிவி தினகரனை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவந்து தமிழ்நாடு முழுக்க தெரிய வைத்தது நாம் தான். என பேசியிருப்பார். இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகவும் வைரலானது. டிடிவி தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே அதிருப்தி  நிலவுவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், புகழேந்தி கூறும்போது, விரைவில் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் தற்போது அமமுக  கட்சியின் சார்பாக வெளியான செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் 14 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் புகழேந்தியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதனால் மீண்டும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது
Step2: Place in ads Display sections

unicc