அமமுகவில் அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள்! நடிகர் ரஞ்சித்துக்கு புதிய பதவி!

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தற்போது

By manikandan | Published: Sep 29, 2019 12:46 PM

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தற்போது தங்களது கட்சியின் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பலருக்கும் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக அமமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக பாமகவில் இருந்து பிரிந்து அமமுகவில் சேர்ந்த ரஞ்சித்திற்க்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்புச் செயலாளராக திருவன்மியூர் முருகன் மற்றும் மற்றும் வி.எஸ்.அருள் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அதேபோல தேர்தல் துணை செயலாளராக திருப்பூர் விசாலாட்சி நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக மாணவரணி செயலாளராக பரணீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு தற்போது அமமுகவின் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Step2: Place in ads Display sections

unicc