தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!

தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி!

தனியார் நிறுவனங்கள் இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில் அவர், இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்காத நேரத்தில் இஸ்ரோவில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்படும் எனவும், இதற்காக ஒரு தொகை கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும், இஸ்ரோவுடன் இணைந்து விண்வெளி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய 500 நிறுவனங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனியார் நிறுவனங்கள் செயல்படக்கூடிய பரந்துபட்ட பகுதிகள் பிரிவுகள் பொருட்களையும், இயந்திர வடிவமைப்புகளையும், மின்னணு வடிவமைப்புகளையும், சிஸ்டம் மேம்பாடுகளையும், ஒருங்கிணைப்பு களையும் வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்க ஊக்குவிக்கப் பட்டு வருவதாகவும் அரசின் முடிவை விஞ்ஞானிகள் வரவேற்பதாகவும் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube