அமலாபாலின் ஆடை படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில், ஆடை படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படம் இன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், ரசிகர்கள் பலரும் டிக்கெட் முன் பதிவு செய்துள்ளனர். கடைசி தருணத்தில் படத்தின் தயாரிப்பாளருக்கு பண விவகாரம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திரையரங்குகளுக்கு கேடிஎம் அனுப்பப்படவில்லை.

இந்த பிரச்சனை காரணமாக காலைக்காட்சிக்கு முன் பதிவு செய்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விநியோகஸ்தருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சுமுகமான பேச்சு ஏற்படவில்லை என்பதால், படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.