கைதான நடிகைகளின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை..!

போதைப்பொருள் தொடர்பாக நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

போதைப்பொருள்தொடர்பான வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களின் போலீஸ் காவல் நிறைவு முடிந்ததை தொடர்ந்து இருவரையும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், 2 பேரும்  ஜாமீன் கேட்டு பெங்களூரு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு கடந்த 18-ம் தேதி விசாரணை வந்தது. அன்று விசாரணையை நடைப்பெற்ற நிலையில், 19-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 19-ம் தேதி ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையின் போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க ஒரு வாரம் கால அவகாசம் கேட்டார்.

இதற்கு நடிகைகள் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதி ஜாமீன் மனுக்கள் மீது ஆட்சேபனை தெரிவிக்க 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு 21-ம் தேதி இன்று ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஜாமீன் மனு மீது விசாரணை நடக்க உள்ளது. இன்று ஜாமீன் கிடைக்குமா..? அல்லது மீண்டும் ஒத்திவைக்கப்படுமா? என்பது இன்றைய விசாரணை முடிவில் தெரியவரும்.

author avatar
murugan