#உங்களை கண்டு பெருமிதம்- சீனாவின் சிறகை ஒடிப்போம்!

#உங்களை கண்டு பெருமிதம்- சீனாவின் சிறகை ஒடிப்போம்!

எல்லை விவகாரத்தில் சீன ஆக்கிரமிப்பை இந்தியா துணிச்சலாக எதிர்த்து நிற்ப்பது பெருமையானது; மற்ற நாடுகள் சீனாவை எதிர்கொள்வதில் அச்சம் தேவையில்லை என்பதை இதன் மூலமாக உணர்ந்து உள்ளதாக அமெரிக்க செனட்டர்  அதிரடியாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு சொந்தமான கிழக்கு லடாக் அருகே, இந்திய-சீன எல்லைப் பகுதியில் கல்வானின்  அத்துமீறி   சீனா அடியெடுத்து வைத்தது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியிலும் இறங்கியது.சீனாவின் அத்துமீறலை அகற்ற களமிறங்கியது இந்திய ராணுவம்.

சீன ராணுவமும் தன் படைகளை குவித்தது.இவ்வாறு இரு நாட்டு வீரர்களுக்கு இடையே  பதற்றமான சூழ்நிலையில் ஏற்பட்ட மோதலை அடுத்து, 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அப்பகுதியில் தற்போது வரை பதற்றம் நீடித்து வருகிறது. அமைதிப் பேச்சில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதை அடுத்து, சீனப் படையினர், பின் வாங்கினர்.

இந்நிலையில் தான் இவ்விவகாரம் குறித்து, அமெரிக்க குடியரசுக் கட்சியை சேர்ந்த, செனட்டர் ஜான் கென்னடிகூறியதாவது:

சீனாவை, எந்த நாடுமே நம்பத் தயாராக இல்லை. உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக சீனா உள்ளது. இதன் காரணமாகவே, அந்நாட்டை எதிர்க்க, மற்ற நாடுகள் அஞ்சுகின்றன.

ஆனால் சீனாவுக்கு எதிராக இந்தியா நிற்கிறது. ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், சீனாவுக்கு எதிரான தங்கள் நிலைபாட்டில்   தெளிவுபடுத்தி உள்ளன.விதிமுறைகளை மதிக்கவில்லை என்றால், எந்த நாடும், சீனாவுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளாது என்ற ஒன்றை சீனாவிற்கு உணர்த்த வேண்டும். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அதை நிறைவேற்ற வேண்டும்.

சீனாவைக் கண்டு அஞ்சி,அனைத்து நாடுகளும் ஓடி ஒளிந்து கொள்வதில்லை. இந்தியாப் போன்ற சில விதிவிலக்கு நாடுகளும் உள்ளன. எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக நின்ற, பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடு மற்றும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது.

இதன் மூலமாக  நாம் சீனாவைக் கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை என்பது பிற நாடுகளுக்கு தெளிவாக விளங்கி இருக்கும் என்று கூறினார்.

author avatar
kavitha
Join our channel google news Youtube