மீண்டும் கிரிக்கெட்டில் களமிங்கும் அம்பதி ராயுடு!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பதி ராயுடு நான்காவது இடத்தில்

By Fahad | Published: Apr 06 2020 06:22 AM

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன அம்பதி ராயுடு நான்காவது இடத்தில் களமிங்கி கலக்கி வந்த அம்பதி ராயுடு .உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை. உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததை குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார்.பின்னர் அம்பதி ராயுடு அனைத்து சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.இவரது அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் களமிறங்க உள்ளார்.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் பி .வி பார்த்தசாரதி டிராபி ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் அம்பதி ராயுடு  விளையாட உள்ளார்.இந்த தொடர் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.