அமேசான் நிறுவனம் கால் பதித்த அமேசான் பே..! இதுல என்ன ஸ்பெஷல்னு தெரிஞ்சிக்கோங்க…

பலவித நிறுவனங்களும் தங்களது தொழிற்நுட்பங்களை போட்டி போட்டு கொண்டு வெளியிடுகின்றன. ஒரு நிறுவனம் சில சிறப்புகளை மட்டுமே வெளியிட்டால். வேறொரு நிறுவனம் அதை விட பல மடங்கு வசதி படைத்த தொழிற்நுட்பத்தை மிக விரைவிலே வெளியிடும். இது இப்போதெல்லாம் மிக ட்ரெண்டான விஷயமாக மாறி விட்டது.

அந்த வகையில் தற்போது உலகின் முதல் பணக்காரர் லிஸ்டில் உள்ள அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் பலவித புதுமையான விஷயங்களை செய்து வருகின்றார். தற்போது கூட பணம் பரிவர்த்தனை செய்ய கூடிய கூகுள் பே, போன் பே போல “அமேசான் பே” என்கிற ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இதில் உள்ள சிறப்பம்சங்களையும். இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் இனி அறிந்து கொள்வோம்.


அமேசான் பே
ஏற்கனவே உள்ள கூகுள் பே போன்ற செயலிகளுக்கு ஈடாக போட்டி போட அமேசான் களம் இறக்கிய மற்றொரு அஸ்த்திரம் தான் இந்த அமேசான் பே. அமேசானில் பொருட்களை வாங்கும் போது எந்தவித சிரமமும் வாடிக்கையாளர்களுக்கு இருக்க கூடாது என்கிற நோக்கில் உருவானதே இந்த செயலி.

வசதிகள்
இந்த செயலியை பயன்படுத்தி பில்கள் செலுத்துவது, ரீசார்ஜ், போன்றவற்றை செய்து கொள்ளலாம். இதுவும் UPI வசதி கொண்ட செயலிகளை போன்று தான் இயங்கும். மேலும், இந்த செயலில் தினசரி UPI வரம்பு 1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் எளிதில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம். தற்போது இந்த சேவை ஆண்டிராய்ட் மொபைல்களுக்கு வந்துள்ளது. இனி iOS போன்களுக்கும் இது வரக்கூடும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment