ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி கொடுத்து தன் மனைவியை விவாகரத்து செய்த அமேசான் நிறுவனர்

ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும்

அமேசான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பு ஜெஃப் பெசோஸ் நாவலாசிரியராக இருந்த மக்கின்சி என்பவரை 1993-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன் பிறகு 1994-ம் ஆண்டு அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். கடந்த சில ஆண்டுகளாக  இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

அமேசான் நிறுவனத்தின் தொடக்கத்தில் இருந்து அடுத்தடுத்த வளர்ச்சி ஆகியவற்றில் மக்கின்சிக்கும் உண்டு. ஆனால் அமேசான் நிறுவனத்தில் அவர் பங்குதாரராக இல்லை.

ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும்
அமெரிக்க சட்டப்படி சொத்துகளில் பாதியளவு மக்கின்சிக்கு உரிமை உள்ளது.  ஆகையால் ஜெஃப் பெசோஸ் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் பாதி 8 சதவீத பங்கு  உண்டு. இதன் மூலம் அவர் 68 பில்லியன் டாலர் சொத்து கிடைக்கும்.
இந்தநிலையில் ஜெப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தில் வைத்துள்ள 16 சதவீத பங்குகளில் 4 சதவீத பங்குகளை மட்டும் போதும் மக்கின்சி என கூறினார்.
இதன் மூலம் அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பெசோஸ்க்கு 12 சதவீத பங்குகளும், மக்கின்ஸிக்கு 4 சதவீத பங்குகளும் என பிரித்தனர்.அமேசான் பங்குகளில் 4 சதவீதம் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.
இந்த விவகாரத்துக்கு பிறகு அமேசானில் ஜெப் பெசோஸூக்கு உள்ள சொத்து மதிப்பு சுமார் 6 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.
author avatar
murugan

Leave a Comment