அமர்நாத் யாத்திரை பனிலிங்க தரிசனம்-தேதி அறிவிப்பு

Amarnath pilgrimage Panilinga darshan-date announcement

 அமர்நாத் குகைக்கோயிலில் பனிலிங்கத்தை தரிசிக்க செல்லும் பக்தர்களின் யாத்திரை வரும் ஜூன் 23ஆம் தேதி தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு யாத்திரை செல்வார்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோவில்.சந்தன் சாடி எனும் இடம் வரை மட்டுமே வாகனங்களில் செல்ல முடியும், அதன் பின் நடந்து தான் செல்ல வேண்டும்.கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடந்து வருகின்ற பதட்டமான சூழல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வருகின்ற ஜூன் மாதம் 23 ந்தேதி தொடங்கி 42 நாட்கள் இந்த யாத்திரை நடக்கிறது என்று ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் மாளிகை தகவல் தெரிவித்து உள்ளது.

A pilgrimage pilgrimage tour to Panalingam in the Amarnath Cave begins on June 23rd. Thousands of people flock here every year to visit the Panlinga at the Amarnath Cave Temple located in the famous Kashmir. Jammu and Kashmir State is about 140 km away from Srinagar. It can only be reached by vehicles in the area till the Santhan Sadi. This year, the Amarnath Yatra is being held for 42 days starting on June 23, the Jammu and Kashmir Governor's House said.