பேட்டிங்  தரவரிசைப் பட்டியலில் அலிஸா ஹீலி , மெக்லானிங் முன்னேற்றம் ..!

பேட்டிங்  தரவரிசைப் பட்டியலில் அலிஸா ஹீலி , மெக்லானிங் முன்னேற்றம் ..!

இலங்கை மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த இரண்டு தொடரிலும் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கை மகளிர் அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டிக்கான பேட்டிங்  தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஸா ஹீலி , மெக் லானிங் இருவரும் இலங்கை மகளிர் அணி உடன் விளையாடிய ஒருநாள் போட்டியின் மூலம் தரவரிசைப் பட்டியலில் முன்னேறி உள்ளனர்.
மெக் லானிங் ஏழாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அலிஸா ஹீலி நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.முதல் இடத்தில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா உள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube