'ராஜா ராணி' ஜோடிக்கு திருமணம் முடிந்து மூன்று மாதம் கடந்துவிட்டதா?! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடர் மூலம் தமிழக வீட்டு

By Fahad | Published: Mar 30 2020 05:23 AM

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி நெடுந்தொடர் மூலம் தமிழக வீட்டு தாய்மார்கள் மட்டுமின்றி, இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்ஜீவ் - ஆலியா மனசா. இவர்களுக்கு இணையதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. இடையில் இருவர்க்கும் திருமணம் நடந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் காதலுக்கு சஞ்ஜீவ் வீட்டில் ஓகேவாம். ஆனால் மனசா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். மேலும் ஆலியா மானஸாவிற்கு வேறு மாப்பிள்ளை வேறு தேட ஆரம்பித்தார்களாம். அதனால் வேறு வழியின்றி நண்பர்கள் முன்னிலையில் மே 27ஆம் தேதி பதிவு திருமணம் செய்துவிட்டனராம். அடுத்து இந்த விஷயம் சஞ்ஜீவ் வீட்டிற்க்கு தெரியவர அவர்கள் முன்னிலையில் முறைப்படி, ஆகஸ்ட் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றதாம். விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாம். ஆனால் இன்னும் ஆலியா வீட்டில் சம்மதம் வரவில்லையாம்.

More News From raja rani serial