சென்னையில் இவைக்கெல்லாம் அனுமதி.! தமிழகஅரசு அதிரடி அறிவிப்பு.!

ஏற்கனவே ஜூன் நேற்று 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, மேலும் புதிய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.பெருநகரம் ஆன சென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.

  • அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும் முயன்ற வரை பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிய புரிவதை சொல்ல வேண்டுமாம்.
  • தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவை நிறுவனங்களில் நேரங்களில் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் 20 சதவீத பணியாளர்கள் அதிகபட்சம் 40 நபர்களுடன் தொடங்க அனுமதி.
  • வணிக வாகனங்கள் தவிர்த்து அனைத்து சொரூம்களும் பெரிய கடைகளில் நகை,ஜவுளி போன்றவை 50% பணியாளர்களும் செயல்படலாம். மேலும் ஒரே நேரத்தில் அதிக பட்ச 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதே உறுதி சேயூர் வேண்டும் முக்கியமாக சம இடைவெளியுடன் கடைபிடிக்க வேண்டும் குளிர் சாதனங்களை இயக்கக் கூடாது.
  • மத்திய அரசு உத்தரவுப்படி ஜூன் 8 மற்றும் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. மொத்த இருக்கையில் 50% இருக்கையில் மட்டும் அமர்ந்து உண்ண வேண்டும் முக்கியமாக குளிர்சாதன வசதிக்கு அனுமதி இல்லை.
  • ஜூன் 8ம் தேதி முதல் டீக்கடைகளில் அவரது இருக்கையில் அமர்ந்து டீ குடிக்க அனுமதி.
  • டீக்கடை உணவு விடுதிகள் ஜூன் 7 வரை பார்சல் மட்டும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி.
  • மேலும் முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கலில் குளிர்சாதன வசதியை பயன் படுத்தாமல் அரசு தனியாக அறிவித்த  நெறிமுறைகளைப் பின்பற்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம் சைக்கிள் ரிக்ஷா இயக்க அனுமதி அளித்துள்ளது.

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.