கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்-அமைச்சர் ஜெயக்குமார்

Alliance talks can go smoothly - Minister Jayakumar

  • மக்களவை தேர்தலில் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு இழுக்க ஒவ்வொரு கட்சியும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றது.
  • கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,கூட்டணி பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும், மெகா கூட்டணி அமையும்.அதிமுக  சூப்பர் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது.நாங்கள் யானை பலம் கொண்டவர்கள், எங்கள் கழுத்தை நெரித்து கூட்டணி அமைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Each party is constantly trying to drag the TMC into their coalition in the Lok Sabha elections. Minister Jayakumar said coalition talks could go smoothly. The AIADMK-BJP-led talks in Chennai on the formation of the coalition in the Lok Sabha elections was signed between the parties. But the talks on the AIADMK-BJP-BJP-DMK alliance continue to drag on. "Alliance talks can go smoothly and the mega coalition will come to an end.