1 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்-உ.பி அரசு அதிரடி அறிவிப்பு

 உத்தரபிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேசத்தில் கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 2 வரை பள்ளிகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஆனால் இதற்கு இடையில் மார்ச் 23 -28 ஆம் தேதி வரை தேர்வு  நடைபெற இருந்தது.

இந்நிலையில் பள்ளிகள் மூடப்பட்டதால் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் கிடையாது என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து அரசு மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.