நடுவரை முறைத்ததால் ஆல்-ரவுண்டர் பிராத்வெய்ட்க்கு அபராதம் !

நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது . இப்போட்டி  மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட்  மைதானத்தில் நடைபெற்றது. போட்டி டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 268 ரன்கள் எடுத்தது.பின்னர் இறங்கியவெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் எடுத்து 125 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராத்வெய்ட் மூன்று ஓவர் வீசி விக்கெட் பறிக்காமல் 33 ரன்கள் கொடுத்தார்.அதில் இரண்டு வைடு கொடுத்தார். இந்நிலையில் பிராத்வெய்ட் 42 -வது ஓவர் வீசும் போது அவர் வீசிய ஒரு பந்தை வைடு என நடுவர் கூறியதால் கோபம் அடைந்த பிராத்வெய்ட்  வைடு இல்லை என நடுவரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அந்த பந்து வைடு தான் என நடுவர் மீண்டும் கூறியதால் பிராத்வெய்ட் நடுவரை பார்த்து முறைத்தார். பிராத்வெய்ட்  செய்த செயல் ஐசிசி விதிமுறைக்கு எதிராக இருந்ததால் அவருடைய சம்பளத்தில் இருந்து  15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

author avatar
murugan